மின்சார தடை..!

நாட்டின் பல பிரதேசங்களில் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தில் இரண்டாவது உற்பத்தி இயந்திரம் செயலிழந்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த இயந்திரம் செயலிழந்துள்ளதாக அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மின்சார கட்டமைப்பின் இருப்பு நிலையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையான மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *