மீண்டும் அமைச்சு பதவி வழங்குமாறு ரவி வேண்டுகோள்

ஆசிரியர் – Editor II

மீண்டும் தமக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர் பதவிகளில் இருந்து விலகுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரை கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதால், ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பெரும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை பிணை முறி விவகாரத்தில் தன் மீது குற்றம் சுமத்தப்படவில்லை எனவும் தனிப்பட்ட கொடுக்கல், வாங்கல் தொடர்பாகவே தன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால்,அமைச்சரவை மாற்றத்தின் போது மீண்டும் தனக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Loading...