‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம் 2.0’- அரசினர் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்களின் ஒன்றுகூடல்!

Please log in or register to like posts.
News

ஈப்போ,டிச.06- ஜாலான் சுங்கை பாரி அரசினர் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில், பள்ளி நிர்வாகம், பள்ளி வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் இணை ஆதரவோடு வரும் டிசம்பர் 12-ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை பள்ளி வளாகத்தில் “மீண்டும் பள்ளிக்குப் போகலாம் 2.0” என்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கடந்தாண்டும் அரசினர் தமிழ்ப்பள்ளியில் இத்தகைய ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் இவ்வாண்டு அந்த மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு முன்பதிவு தேவைப்படுகிறது. அதனால், கடந்தாண்டு கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களும் , புதிதாக கலந்துகொள்ளவிருக்கும் முன்னாள் மாணவர்களும் தங்களின் வரவை பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அரசினர் தமிழ்ப்பள்ளியில் தற்போது உள்ள வகுப்பறைகளை அதிநவீன மின்னியல் வகுப்பறைகளாக மாற்றுவதற்கான பெருந்திட்டம் வரையப்பட்டுள்ளது. இவ்வேளையில், முன்னாள் மாணவர் மன்றத்தின் மாபெரும் சக்தி இத்திட்டத்திற்கு கைக்கொடுக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் பேராதரவும் ஒத்துழைப்பும் வரவேற்கப்படுவதாக அம்மன்றத்தின் தலைவர் வே.விஜய் கூறினார்.

இதனிடையே, முன்னாள் மாணவர் மன்றத்துடன் தொடர்பு இல்லாத முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் உடனடியாக தங்களின் தொடர்பு எண்களை மன்றத்தின் பொறுப்பாளர்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதே சமயம், அவர்களுக்குத் தெரிந்த முன்னாள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மேல் விவரங்களுக்கு கீழ்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:-

தலைமையாசிரியர்: இரா.முனுசாமி – 012-5959913
மாணவர் மன்றத் தலைவர்: வே.விஜய் – 012-5226321
மாணவர் மன்றத் துணைத் தலைவர்: ச.விக்னேசன் – 016-5181609
மாணவர் மன்றச் செயலாளர்: ப.விஸ்வநாதன் – 019-5770799

Dear friends, for those who have registered for last year event and came to make the last year event successful, we thank you for your support.Please kindly re-register again for this year Meendum Pallikku Pogalam 2.0 Event which is going to be Spectacular with your chance to meet the beloved Ex-Classroom Teachers.Entry FREEKindly click and fill up the provided link to reserve your place.See you there!!https://www.facebook.com/2137682439800946/posts/2242268792675643/

Posted by PersatuanAlumni SJKT Kerajaan Ipoh Perak on Wednesday, 5 December 2018

The post ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம் 2.0’- அரசினர் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்களின் ஒன்றுகூடல்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *