மீண்டும் முன்னணி நிலையை அடைவது எளிதான காரியம் அல்ல: சானியா மிர்சா

குழந்தை பெற்ற பிறகு மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்ப இருக்கும் சானியா மிர்சா, முன்னணி நிலைக்கு வருவது எளிதான காரியம் அல்ல என்று தெரிவித்துள்ளார். #Saina

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்தவர் சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் ஆறுமுறை கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் டென்னிஸ் போட்டியில் விளையாட தீர்மானித்துள்ளார்.

இதுகுறித்து சானியா மிர்சா கூறுகையில் ‘‘நான் முன்னர் மனைவியாக இருந்தேன். தற்போது அம்மாவாகியுள்ளேன். மீண்டும் டாப் நிலையை பெற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அது மிகவும் எளிதானது கிடையாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதை செய்வதைவிட வேறு மதிப்பு ஏதும் இல்லை.

என்னுடைய யதார்த்தமான இலக்கே மீண்டும் டென்னிஸ் விளையாட்டிற்கு திரும்ப வேண்டும் என்பதுதான். இந்த வருட இறுதியில் அது நடக்க வாய்ப்புள்ளது. இதற்கு முன் பேசும்போது 2020-ல் மீண்டும் விளையாட்டிற்கு திரும்புவேன் என்றேன். அதற்கு காரணம் உள்ளது. எனக்கு நானே நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. தற்போது வரை அதை நான் செய்யவில்லை.

குழந்தை வீட்டில் இருக்கும்போது வாழ்க்கை பெரிய அளவில் மாற்றமடைகிறது. எந்தவொரு விஷயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாது. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு அவர்களது வாழ்க்கையில் சிறிதளவு செல்பிஷ் உள்ளது. இது அவர்களின் பிட்னெஸ், ஓய்வு மற்றும் வேலையைப் பற்றியது’’ என்றார்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *