மீனவர்கள் கடலுக்குள் செல்ல எச்சரிக்கை!!

தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாகவே சில இடங்களில் கனமழை பெய்தும் சில இடங்களில் வறண்ட நிலை நிலவியும் வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.

அந்த வகையில் குமரிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தது.

மேலும்., அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்பதால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தபட்டுள்ளனர்.

மேலும் தற்போது வரை தமிழகத்தில் நாகப்பட்டினத்தில் சுமார் 8 செ.மீ. அளவிற்கு மழையும்., தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 7 செ.மீ மழையும் ., இராமேஸ்வரத்தில் 6 செ.மீ. மழையும் மற்றும் வேதாரண்யம்., திருவைகுண்டம் பகுதிகளில் சுமார் 5 செ.மீ மழையும்., பாம்பனில் 4 செ.மீ மழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *