மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததற்காக மெக்சிகன் குடிவரவு அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.

மெக்சிகோவில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதால், அவர்களை தடுக்காவிட்டால் ஏற்றுமதிகள் மீதான வரி அதிகரிக்கும் என அமெரிக்க எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து இருநாடுகளுக்கு இடையில் கடந்த ஜூன் மாதம் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களை தடுத்து நிறுத்தம் நடவடிக்கையில் மெக்சிகோ தீவிரமாக ஈடுபட்டது.

இந்த நடவடிக்கையின் போது இந்தியாவை சேர்ந்த குறிப்பாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட 311 பேர் சிக்கினர்.

இந்த நிலையில் அவர்கள் அனைவரும் பட்டய விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களுடன் 74 மெக்சிகன் அதிகாரிகளும் வந்ததாக இங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *