மைத்­தி­ரி­யுடன்- கூட்­ட­மைப்பு இன்று முக்­கி­ய­ பேச்சு!!

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் படை­யி­னர் மற்­றும் திணைக்­க­ளங்­க­ளின் பிடி­யில் உள்ள நில விடு­விப்பு தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும் இடை­யில் இன்று மாலை முக்­கிய பேச்சு நடை­பெ­ற­வுள்­ளது.
கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் நாடா­ளு­மன்ற வளா­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. இதன்­போதே அரச தலை­வ­ரைச் சந்­திப்­ப­தற்­கான தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டது.
கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன் மற்­றும் பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளான மாவை சேனா­தி­ராசா (தமிழ்அர­சுக் கட்சி), செல்­வம் அடைக்­க­ல­நா­தன் (ரெலோ), த.சித்­தார்த்­தன் (புளொட்) ஆகி­யோர் அரச தலை­வரை இன்று மாலை 6 மணிக்கு சந்­திப்­ப­தாக முடி­வா­கி­யுள்­ளது.
வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் தொல்­பொ­ருள் திணைக்­க­ளம், வன உயி­ரி­கள் திணைக்­க­ளம் ஆகி­ய­வற்­றின் பிடி­யில் உள்ள நிலங்­கள் விடு­விப்பு தொடர்­பில் குறித்த திணைக்­க­ளங்­க­ளின் பணிப்­பா­ளர்­க­ளு­டன் விரை­வில் அரச தலை­வர் ஒரு சந்­திப்பை ஏற்­ப­டுத்தி அவர்­க­ளு­ட­னான நேரடி சந்­திப்­பில் அவர்­க­ளி­டம் இருந்து உட­ன­டி­யா­கப் பதி­லைப் பெற்­றுத்­தர வேண்­டும் என இன்­றைய பேச்­சில் கோரிக்கை விடுக்­கப்­ப­ட­வுள்­ளது.
அதே­வேளை, வடக்கு கிழக்­கில் 8 மாவட்­டங்­க­ளில் இன்­ன­மும் படை­யி­ன­ரின் பிடி­யி­லுள்ள நிலங்­க­ளின் விவ­ரங்­க­ளை­யும் அரச தலை­வ­ரி­டம் இன்று சமர்ப்­பித்து அதற்­கான பதி­லைப் பெற­வும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது தற்­போ­தைய அர­சி­யல் நில­வ­ரம் தொடர்­பில் கூட்­ட­மைப்­பு­டன் அரச தலை­வர் பேசு­வார் என­வும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
இந்­தச் சந்­திப்­புத் தொடர்­பில் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை சோ.சேனா­தி­ராசா உத­ய­னுக்­குத் கருத்­துத் தெரி­வித்­தார்.மயி­லிட்டி, பலாலி கிழக்கு உள்­ளிட்ட பாது­காப்­புப் படை­க­ளால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள காணி­கள் தொடர்­பா­கத்­தான் அரச தலை­வ­ரு­டன் பேசு­வ­தற்கு நேரம் கேட்­டோம்.
கடந்த இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னர் கேட்­ட­போது அவர் லண்­ட­னுக்­கும், கொரி­யா­வுக்­கும் தொடர்ச்­சி­யா­கச் சென்­ற­த­னால் அவ­ரு­டைய நேரத்­தைப் பெற­மு­டி­யா­மல் போனது. இப்­போது மயி­லிட்­டிப் பிர­தே­சத்­தில் துறை­மு­கம் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு திறந்து வைக்­கப்­பட்­ட­போ­தும் அந்த மக்­கள் அங்கு மீளக் குடி­ய­மர அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.
முக்­கி­ய­மாக தலைமை அமைச்­சர் யாழ்ப்­பா­ணம் வந்­த­போது கடந்த 16ஆம் திகதி யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் இடம்­பெற்ற கூட்­டத்­தில் பலாலி கிழக்கு உள்­ளிட்ட ஏனைய பகு­தி­களை இரா­ணு­வம் தங்­க­ளுக்­குத் தேவை­யா­னது என்று கூறி­யுள்­ளது. நாங்­கள் அங்­கேயே அதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்­தி­ருந்­தோம்.
அது மட்­டு­மல்­லா­மல் மயி­லிட்­டித் துறை­மு­கத்­துக்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அடிக்­கல் நட்­ட­போது அந்த வருட இறு­திக்­குள் மக்­கள் மீள்­கு­டி­ய­மர்­வ­தற்கு அனு­ப­திப்­ப­தாக பகி­ரங்­க­மாக கூறி­யி­ருந்­தார்.
அது பற்­றி­யும், மயி­லிட்டி, பலாலி மட்­டு­மல்­லாது வடக்கு கிழக்­கில் எங்­கெங்கு இரா­ணு­வம் மக்­க­ளு­டைய காணி­களை ஆக்­கி­ர­மித்­துள்­ளதோ அவற்றை விடு­விக்­கு­மா­றும் அரச தலை­வரை வற்­ப­றுத்­த­வுள்­ளோம் – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *