மைத்திரியுடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் சந்திப்பு..

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தணிக்கும் வகையில் இலங்கையில் உள்ள உயர்மட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அதுல் கேஷாப் மற்றும் இந்திய தூதுவர் தரஞ்சித்சிது ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது நாட்டில் அரசியலில் தளம்பல் நிலை தோன்றியுள்ளது.

இச் சந்திப்பில் மூலம் நாட்டில் சுமுகமான சூழல் ஏற்படலாம் என கூறப்படுகிறது

செய்தி மூலப்பிரதி – இலங்கைச் செய்திகள் – LankaSee

You might also like
Comments
Loading...