மைத்திரி – ரணிலுக்கு இடையில் மீண்டும் அவசர சந்திப்பு! பரபரப்பாகும் அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விகரமசிங்க ஆகியோருக்கு இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில், ஆளும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன தோல்வியை சந்தித்துள்ளன.

இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஜனாதிபதியும், பிரதமரும் இரண்டு தடவைகள் சந்தித்து பேசியிருந்தனர்.

இந்நிலையில், மூன்றாவது முறையாகவும் குறித்த இருவரும் தற்போது சந்தித்து பேச்சிவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பு ஜனாதிபதியின் வாசஸ்தளத்தில் இடம்பெறுகின்றது.

இதில், ஐக்கிய தேசியக் கட்சியின், மங்களசமரவீர், கபீர் ஹாசீம், ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கலந்துரையாடலின் போது முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும், அதனால் கொழும்பு அரசியல் மீண்டும் பரபரப்பாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

செய்தி மூலப்பிரதி – இலங்கைச் செய்திகள் – LankaSee

You might also like
Comments
Loading...