யாழ் கடலில் மிதந்து வந்த மர்மபொருள்!

Please log in or register to like posts.
News

காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 49 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகளை மீட்டு நேற்று முன்தினம் காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் கடற்படையினர்.

மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 80 இலட்சம் எனத் தெரியவருகிறது. நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் கடற்படையினரின் டோறா படகு சுற்று ரோந்தில் ஈடுபட்டிருந்த போது காங்கேசன்துறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மிதந்து வந்த பொதியினை சோதனை மேற்கொண்ட போது கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மீட்கப்பட்ட கஞ்சா காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையினர் கூறினர். எனினும் இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *