யாழ். குருநகர் ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டிடம் திறப்பு

யாழ். குருநகர் ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கான புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தின் திறப்பு விழா வட மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு கட்டடத் தொகுதியின் பெயர்ப் பலகையினை திரைநீக்கம் செய்ததுடன், நுழைவாயில் நாடாவினையும் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சர் க.குணசீலன் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ். குருநகர் ஆதார வைத்தியசாலையில் நிலவி வந்த வெளிநோயாளர் பிரிவிற்கான குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் பொருட்டு வட மாகாண சுகாதார அமைச்சினால், இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலப்பிரதி – இலங்கைச் செய்திகள் – www.theevakam.com

Loading...