ரஜினி மகள் ஐஸ்வர்யா டேபிள் டென்னிஸ் அணி உரிமையாளர் ஆனார் – சென்னை அணியை வாங்கினார்

ரஜினி மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா டேபிள் டென்னிஸ் சென்னை லயன் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக இணைந்து உள்ளார்.

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா கணவர் நடிப்பில் 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படங்களை இயக்கினார்.

ஐஸ்வர்யா தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விளையாட்டு துறையிலும் கவனத்தை திருப்பி உள்ளார்.

டேபிள் டென்னிஸ் சென்னை லயன் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக ஐஸ்வர்யா இணைந்து உள்ளார்.

வருகிற 25-ந் தேதி முதல் டெல்லியில் 2019-ம் ஆண்டுக்கான அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி தொடங்க உள்ளது. இப்போட்டியில் தனது அணியாளருடன் ஐஸ்வர்யா பங்கேற்க உள்ளார்.

இதில் சென்னை, டெல்லி, புனே, கோவா, கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

சென்னை லயன் அணியில் ‌ஷரத், மதுரிகா, டியாகோ, பெட்ரிசா, அனிர்பன்கோஷ் மற்றும் யாஷினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.