ரவாங் துப்பாக்கி சூடு விவகாரத்தில் புக்கிட் அமான் விசாரணை நடத்த வேண்டும் – பி.எஸ்.எம் அருட்செல்வம் கோரிக்கை.

கோலாலும்பூர், செப்21-  ரவாங் பத்து ஆராங்கில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்த விசாரணையைப் புக்கிட் அமான் நடத்தவேண்டுமென பி.எஸ்.எம். கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் சிலாங்கூர் போலீஸ் துறை செயல்ப்பட்ட விதம் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக அவர் சொன்னார். சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் வெளியிட்ட சில தகவல்களினால் சிலாங்கூர் போலீஸ் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். செப்டம்பர் 14ஆம் திகதி அன்று போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சந்தேகத்திற்குரிய மூன்று கொள்ளையர்களைச் சுட்டு கொன்றதாக சிலாங்கூர் போலீர் தலைவர் நூர் அஸாம் ஜமாலுடின் கூறியிருந்தார். அதோடு, அவர்கள் பயணம் செய்த வாகனத்திலிருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் முகமூடிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வெளியிட்டிருக்கும் தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உண்மை நிலையை கண்டறிவதற்குப் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை நடத்த வேண்டும் என்று அருட்செல்வன் கேட்டு கொண்டார்.

The post ரவாங் துப்பாக்கி சூடு விவகாரத்தில் புக்கிட் அமான் விசாரணை நடத்த வேண்டும் – பி.எஸ்.எம் அருட்செல்வம் கோரிக்கை. appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *