ரிம.18 பில்லியன் GST பணம்; பக்காத்தான் செலவு செய்துவிட்டது! -நஜிப் புகார்

Please log in or register to like posts.
News

கோலாலம்பூர், ஆகஸ்ட். 10- கிட்டத்தட்ட 18 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி பணம் தேசிய முன்னணியினால் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியிருக்கும் வேளையில், அரசின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியில் இருந்து அந்தப் பணத்தை எடுத்து பக்காத்தான் அரசாங்கம் செலவு செய்து விட்டது என்று முன்னாள் பிரதமர் நஜிப் குற்றஞ்சாட்டினார்.

ஜிஎஸ்டி வரியை ஜூன் மாதம் 1ஆம் தேதி அகற்ற பக்காத்தான் அரசு முடிவு செய்ததை அடுத்து அந்தப் பணத்தையெல்லம் எடுத்து சொந்தச் செலவுகளுக்கு அரசாங்கம் பயன்படுத்தி விட்டதாக நஜிப் குற்றஞ்சாட்டினார்.

ஜிஎஸ்டி அகற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக எஸ்எஸ்டி வரியும் இல்லாத நிலையில் அரசாங்கத்திற்கு வருமானம் இல்லை. எனவே அந்த 18 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் சொந்தச் செலவு செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த ஒருங்கிணைக்கப்பட்ட நிதி என்பது வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை திருப்பிக் கொடுப்பதற்காக வைக்கப் பட்டிருந்த நிதியம். அதனை உடனடியாக திருப்பிக் கொடுப்பதில் சிரமம் நிலவிய வேளையில் அந்தப் பணத்தை பக்காத்தான் செலவு செய்து விட்டு பழியை மற்றவர்கள் மீது போடுகிறது என்று நஜிப் சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *