ரிஷாத் சஹ்ரானின் சகோதரரா? புதுப் புரளி..

தெமட்டகொடையில் குண்டை வெடிக்கவைத்து உயிரிழந்தவர் ரிஷாத் பதியுதீனின் சகோதரியென அன்மைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விமல் வீரவன்ச தெரிவித்ததனால் சர்ச்சை உருவானது.

இதன்போது அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்,பி குறுக்கிட்டபோது, நீங்கள் சஹ்ரானின் சித்தப்பாவா என கேட்டபோது இருவருக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற மதுவரி கட்டளை சட்ட விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலே இவ்வாறு இரண்டுபேருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.

விமல் வீரவன்ச உரையாற்றும்போது, தெமட்டகொட குண்டு வெடிப்பில் ரிஷாத் பதியுதீனின் தாயாரின் சகோதரியே கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

அதனை& அப்துல்லா மஹ்ரூப் எம்.பி மறுத்தார். அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவெனவும் கூறினார்.

இதன்போது விமல் வீரவன்ச, நீங்களா சஹ்ரானின் சித்தப்பா? ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவென்றால் சஹ்ரான் என்ன இந்துவா அல்லது பௌத்தனா? ஐ.எஸ்.ஐ.எஸ் .பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் இல்லையா?

சிரியாவில் கொல்வது முஸ்லிம்கள் இல்லையா? அதனால் நீங்கள்தான் அடிப்படைவாதிகளை பாதுகாப்பவர்கள். அதனால்தான் ரிஷாத் பதியுதீன்னுக்கு எதிராக குற்றம் தெரிவிக்கப்படுகின்றது. பெளசிக்கோ எம்.பிக்கோ ஹக்கீம் எம்.பிக்கோ இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதில்லை.

இந்த நாட்டில் அடிப்படைவாதம் எந்த இனத்தில் இருந்து வந்தாலும் அதனை நாங்கள் தடுத்து நிறுத்தவேண்டும். அதற்கு தமிழ் முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்து போராடவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டை பாதுகாக்கலாம் என்றார்.

பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாத் பதியுதீன், விமலின் கருத்திற்கு காட்டமான பதிலடி கொடுத்தார்.

“எனது தாயின் சகோதரர் ஒருவரின் மகள்தான் தெமடகொட தற்கொலை குண்டுதாரி என்று விமல் வீரவன்ச, நான் சபையில் இல்லாத வேளை தெரிவித்திருக்கின்றார். எனது தாய்க்கு சகோதரர் இல்லை. இது போன்ற பொய்யான பிரசாரங்களை இந்த உயர் சபையிலையே விமல்வீரவன்ச தொடர்ச்சியாக கூறிவருகின்றார் .

குண்டுகள் வெடித்த நாளிலிருந்து விமல் வீரவன்ச இவ்வாறான பொய்களை சொல்லிசொல்லி இனங்களுக்கிடையே குரோதத்தையும் பிரச்சினைகளையும் உருவாக்குவதில் முனைப்புடன் செயற்படுகின்றார். அவர் சொல்லுவது எல்லாம் அப்பட்டமான பொய்யாகும். எனவே தான் அவர் எனக்கு எதிராக எந்த விதமான முறைப்பாடுகளையும் பொலிஸில் இதுவரை செய்யவில்லை.

இந்த உயர் சபையின் சிறப்புரிமையை பயன்படுத்தி இவர் மேற்கொள்ளும் இவ்வாறான பொய்பிரசாரங்களை ஊடகங்களும் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக கொண்டு செல்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *