ரோகித் சர்மாவை முந்தினார் விராட் கோலி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராட் கோலி 71 ரன்கள் அடித்ததன் மூலம் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் ஆட்டத்தில் அனல் பறந்தது.

அவர் 52 பந்தில் 72 ரன் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்கர்களும் அடங்கும். 66 ரன்னை எடுத்த கோலி 20 ஓவர் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.அவர் ரோகித்சர்மாவை முந்தினார்.

விராட்கோலி 71 ஆட்டத்தில் 66 இன்னிங்சில் 2441 ரன் எடுத்துள்ளார். 18 முறை அவுட் இல்லை என்பதால் சராசரி 50.85 ஆகும். 22 அரை சதம் அடித்துள்ளார். ஆனால் இதுவரை அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் சதம் அடித்தது இல்லை அதிகபட்சமாக 90 ரன் எடுத்துள்ளார்.

3 வகையிலான போட்டியிலும் (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) 50 ரன்னுக்கு மேல் சராசரி வைத்துள்ள உலகின் ஒரே வீரர் கோலி ஆவார்.

ரோகித்சர்மா 97 ஆட்டத்தில் 89 இன்னிங்சில் 2434 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். சராசரி 32.45 ஆகும். 4 சதமும், 17 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 118 ரன் எடுத்துள்ளார்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *