ரோன் 95- டீசல் விலை மாற்றமில்லை! ரோன் 97- உயர்ந்தது!

கோலாலம்பூர்,மே.24- இவ்வாரத்தில் ரோன் 95 பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. ஆனால் ரோன்  97 பெட்ரோல் விலை 8 சென் உயர்ந்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

மே 25ஆம் தேத் தொடங்கி 31ஆம் தேதி வரையிலான பெட்ரோல் விலை நிர்ணய அறிவிப்பை அமைச்சு இன்று வெளியிட்டது.

விலைப் பட்டியலில் ரோன் 95 பெட்ரோல் விலை மாற்றம் நிகழாததால் ஒரு லிட்டர் ரிம 2.08 காசாக விற்கப்படும். அதே சமயம் டீசல் விலையும் ரிம.2.18 காசில் தொடரப்படவுள்ளது.
ரோன் 97 பெட்ரோல் விலை மட்டும் 8 காசு உயர்ந்துள்ளதால் அந்த ரக பெட்ரோல் லிட்டர் ஒன்று ரிம 2.76க்கு விற்கப்படும்.

The post ரோன் 95- டீசல் விலை மாற்றமில்லை! ரோன் 97- உயர்ந்தது! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *