ரோஹிங்யா அகதிகளுக்கு கனடாவில் அடைக்கலம்

rohiengaகனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் ரோஹிங்யா அகதிகளுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளதாக கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மியன்மார் மற்றும் பங்களாதேஷில் இருந்து பாதிக்கப்பட்ட ரோஹிங்ய இன மக்கள் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாகத் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்தும் ரோஹிங்ய மக்கள் கனடா நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் ரோஹிங்ய மக்களைக் கையாளும் விதங்கள் தொடர்பாக கனடிய மக்களின் ஆதரவு தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

57 சதவிகிதம் கனடிய மக்களின் ஆதரவு இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரிய வந்திருப்பதாகவும், கனேடியர்களில் 10இல் 6 பேர், ரோஹிங்யர்கள் கனடாவில் நுழைவதற்கு ஆதரவு தருவதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், மனிதாபிமான அடிப்படையில் கனடிய அரசாங்கம் 150 மில்லியன் டொலர்களை ஒதுக்கியிருப்பதாக முன்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது குறித்த தொகையினை 300 மில்லியன் டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.