லாரியிலிருந்து கொட்டிய பணம்! ஓடியோடி பொறுக்கிய மக்கள் !

வாஷிங்டன், ஜூலை .12- அமெரிக்கா சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்து பணம் கட்டு கட்டாக கீழே கொட்டி உள்ளது. அதனை பார்த்த மக்கள் ஓடோடிச் சென்று பணத்தை பொறுக்கிச் சென்றனர்.

இச்சம்பவம் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் எஸ்போர்ட்
டன்வூடி சாலையில் நடந்தேறியுள்ளது. பணம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியின் காரின் கதவு திடீரென திறந்ததால் அதிலிருந்து பணம் கொட்ட தொடங்கியது். கணக்கீட்டின் படி சுமார் 1,75 000 டாலர்கள் கீழே விழுந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

பணம் விழுவதைக் கண்ட அவ்வழியாகச் சென்ற வாகன மோட்டிகள் தங்களது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பணத்தை எடுத்துச் சென்றனர் .

ஆனால் அந்நாட்டு காவல்துறை ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளது.கட்டுப் பணத்தில் சீரியல் நம்பர் உள்ளது. நீங்கள் அந்த பணத்தை எங்கு கொடுத்தாலும் கண்டுபிடித்துவிட முடியும் .எனவே தாங்களாக வந்து அந்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுங்கள் என தெரிவித்துள்ளது். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதையாகிப் போனது.

The post லாரியிலிருந்து கொட்டிய பணம்! ஓடியோடி பொறுக்கிய மக்கள் ! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *