லென்ஸ் அணிந்து குளித்த வாலிபரின் கண் பறிபோனது!

ஷ்ரூஸ்பெரி, ஜூலை 12 – இங்கிலாந்தில் ஆடவர் ஒருவர் குளிக்கும்போது கண்களில் அணிந்திருந்த லென்ஸை கழற்றாமல் குளித்ததால்,  நீரில் இருந்த பாக்டீரியா அவரின் வலது கண்ணை வெகுவாகப் பாதித்து பார்வையை இழந்துள்ளார்.

நிக் ஹம்பஹரேயஸ் (வயது 29) என்பவர் சிறு வயதிலிருந்தே தன் மூக்குக் கண்ணாடியை அணிந்து வந்துள்ளார். பின்னர் 2013, ஆண்டில்   தடகள வீரரான நிக் கண்களுக்கு லென்ஸ் அணிந்து பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் வாரத்தின் ஐந்து நாட்கள் லென்ஸ் அணிவதும் பின்னர் மற்ற நாட்களில் மூக்குக் கண்ணாடியை அணிவதும் வழக்கம். அப்படி இருக்கையில், ஒரு நாள் தூக்கத்திலிருந்து எழும்போது தன் வலது கண்ணில் ஏதோ நெருடல் ஏற்பட்டு  பார்வை தெளிவற்று போனது. லென்ஸ் அணியும் போது தவறுதலாகக் கீறல் விழுந்திருக்கும் என எண்ணி அவர் அதை பொருட்படுத்தவில்லை.

ஒரு நாள் நிலைமை மோசமடையவே கண் மருத்துவரை அணுகியுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர் நிக்கிற்கு வலது கண்ணில் “அல்சர்” (ulcer) ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஷ்ரூஸ்பெரி ராயல் மருத்துவமனைக்குச்  செல்லுமாறு கூறியுள்ளார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர் நீரில் தென்படும் “அகந்தமொபா கெராடிடிஸ் (ஏ.கே) Acanthamoeba keratitis (AK)” எனும் ஒரு வகை தொற்று கிருமி அவரின் வலது கண்ணில் பரவி பாதித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அது குளிக்கும் போது தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதை பற்றி ஊடகம்  ஒன்றிக்கு நிக் குறிப்பிடுகையில், தான் எப்போதும் போலத்தான் அன்று அந்த லென்ஸை அணிந்து ஜிம்மிற்கு சென்ற பின்னர், குளித்து விட்டு அலுவலகத்திற்கு சென்றதாகவும், இதுவரை தன் கண் மருத்துவர் குளிக்கும் போது அந்த லென்ஸை கழற்றச் சொல்லி அதன் அபாயத்தை விளங்கியதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தன் கண் அகற்றப்படுமா எனும் கேள்விக்கு மருத்துவர் சாத்தியம் இருப்பதாகக் கூற அவர் கலக்கமடைந்துள்ளார்.

மூன்று வாரங்களாக சிகிச்சை பெற்றும், தற்போது நிக் தன் வலது கண் பார்வையை முற்றிலும் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post லென்ஸ் அணிந்து குளித்த வாலிபரின் கண் பறிபோனது! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *