வட அமெரிக்காவில் சிறப்பான WIFI வசதி கொண்ட பட்டியலில் கனடா விமான நிலையங்கள்

airportவட அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் WiFi வசதிகள் அடிப்படியில் கனடாவின் கால்கரி விமான நிலையம் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

சிறப்பான முறையில் வழங்கப்படும் WiFi வசதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், முதல் 10 இடங்களிற்குள் 3 ஆவது இடத்தில் கால்கரி விமான நிலையமும், 7 ஆவது இடத்தில் வான்கூவர் சர்வதேச விமான நிலையமும் இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில் கால்கரி விமான நிலையத்தில், WiFi வசதிகள் தரவிறக்கத்திற்காக 67.23 (Mbps) மற்றும் தரவேற்றம் 87.99 (Mbps) ஆகவும் காணப்படுகின்றது.

மேலும், இந்த பட்டியலில் 23 ஆவது இடத்தில் ரொறன்ரோ விமான நிலையம் காணப்படுவதுடன், அதுமட்டுமன்றி மோசமான விமான நிலையமாக மொண்ட்ரியால் சர்வதேச விமான நிலையம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *