வயிற்றில் குத்தப்பட்ட கத்தியுடன் இரத்த வெள்ளத்தில் மனோகரன்!

புக்கிட் மெர்டாஜாம், ஜன.13- வயிற்றில் குத்தப்பட்ட கத்தி, அப்படியே குத்திய நிலையில் இருக்க, இங்கு தாமான் புலாசான் அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடு ஒன்றில் ஆர். மனோகரன் (வயது 55) என்பவரின் உடலை போலீசார் மீட்டனர்.

வீட்டின் அறையில் அவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாகவும் வயிற்றில் குத்தப்பட்ட 33 செண்டி மீட்டர் நீளமுள்ள கத்தி அப்படியே குத்திய நிலையில் இருந்ததாகவும் செப்பராங் பிறை தெங்கா மாவட்டப் போலீஸ் அதிகாரி நிக் ரோஸ் அஷான் தெரிவித்தார்.

மனோகரனின் உடலில் 13 இடங்களில் கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. முதுகிலும் விலா பகுதியிலும் மேலும் இரு இடங்களில் கத்திக் குத்தக் காயங்கள் இருந்தன. குளியல் அறையில் கை கழுவும் இடத்தில் 23 செண்டி மீட்டர் நீளமுள்ள உளி ஒன்றும் கிடந்ததாக அவர் கூறினார்.

கொலையுண்ட மனோகரன் புக்கிட் தெங்கா பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு மியான்மார் தொழிலாளர்களை சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது.
இந்த மூன்று அறை கொண்ட வீட்டில் இதர 10 மியான்மார் பிரஜைகளுடன் மனோகரன் வசித்து வந்துள்ளார்.

மியான்மார் தொழிலாளர்களைக் காலையில் தொழிற்சாலைகளுக்கு கொண்டு போய் விட்டு விட்டு, வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற மனோகரன், மதியம் தொழிலாளர்களுக்கு உணவு வாங்கி வராத நிலையில் தொழிலாளர்கள் வேலை செய்ய மறுத்து விட்டதாக கூறப்பட்டது என்று போலீஸ் அதிகாரி நிக் ரோஸ் அஷான் கூறினார்.

பின்னர் அவரைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றிருந்த போது அவருடைய அறை பூட்டப்பட்டிருந்தது வேளையில் வரவேற்பு அறையில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் ஒருவர் கூறினார்.

ஆனால் மனோகரன் தனது அறைக்குள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர் மியான்மார் தொழிலாளர் ஒருவரின் உதவியுடன் குளியல் அறை வழியாக அவருடைய அறைக்குள் நுழைந்து அறையின் கதவைத் திறந்ததாக அந்த நபர் கூறினார்.

இன்று மனோகரனின் பிரேதப் பரிசோதனை நடத்தப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மியான்மார் தொழிலாளர்கள் சிலர் தங்களது விசாரணைக்கு உதவக் கூடும் என்று போலீஸ் அதிகாரி நிக் ரோஸ் அஷான் குறிப்பிட்டார்.

 

oom.

The post வயிற்றில் குத்தப்பட்ட கத்தியுடன் இரத்த வெள்ளத்தில் மனோகரன்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *