வரணியில் இரு நூல்கள் வெளியீடு!!

கலாபூஷணம் வடவரணி சி.சபாவின் இரு நூல்கள் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் வரணி கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

சிரேஷ்ட பேராசிரியர் ம.இரகுநாதன் நூல்களை வெளியிட, மரணிக்கும் மண்வாசனை நூலின் முதற்பிரதியை வரணி வடக்கு இலக்கிய ஆர்வலர் க.குணரத்தினமும், ஓவியமும் சிற்பமும் என்ற நூலின் முதற்பிரதியை புலோப்பளை இலக்கிய ஆர்வலர் வ.செல்வராசா ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.

நூலாசிரியர் வடவரணி சி.சபா நதியோர நாணல்கள் இலக்கிய மன்றத் தலைவர் வ.ஜசிந்தன் மற்றும் பொருளாளர் செல்வி. வி.மிதுலா ஆகியோரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *