வவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்து…!!!

வவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் பரிதாபமாக சாவடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்…

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.

குறித்த உழவியந்திரம் பெரியகட்டு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் திரும்ப முற்பட்டபோது கட்டுபாட்டை இழந்து அருகில் இருந்த மதகுடன் மோதி முற்றாக குடைசாய்ந்தது.

உழவியந்திரத்தில் பயணம் செய்த கணவன் தூக்கிவீசபட்டதுடன், மனைவி உழவியந்திரத்தின் கீழ்பகுதியில் நசியுண்டுள்ளார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அவசர அம்புலன்ஸ் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் சாவடைந்துள்ளார்.கணவன் சிறு காயங்களிற்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் பெரியகட்டுபகுதியை சேர்ந்த தனுசா வயது 21 என்ற ஒரு பிள்ளையின் தாயே சாவடைந்துள்ளார்.

குறித்த பெண்ணே உழவியந்திரத்தை ஓட்டியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *