வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் புதிய எமோஜி ஸ்டைல்

வாட்ஸ்அப் செயலியில் ஸ்டேட்டஸ் அப்டேட்களில் விரைவில் புதிய எமோஜி ஸ்டைல் வழங்கப்பட இருக்கிறது. #WhatsApp

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய எமோஜி ஸ்டைல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எமோஜிக்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் பகுதியில் சேர்க்கப்பட இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.110 பதிப்பில் இந்த வசதி வழங்கப்படுகிறது.

எனினும், இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு தற்சமயம் வரை செயலிழக்கப்பட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் பற்றிய தகவல் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து தற்சமயம் எமோஜி பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு தளத்தில் ஸ்கிரீன்ஷாட்களை முடக்குவதற்கான வசதியை வழங்க இருப்பது பற்றிய விவரமும் வெளியானது.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.110 வெர்ஷனில் பயனர்களுக்கு புதிய எமோஜி ஸ்டைல் டூடுள் பிக்கர் மூலம் கிடைக்கும். புதிய எமோஜி ஏற்கனவே செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் எமோஜிக்களுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய எமோஜி ஸ்டைல் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இது பயனரின வழக்கமான சாட்களில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வராது.

புதிய எமோஜி ஸ்டைல் பற்றிய ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய எமோஜி ஸ்டைல் வழக்கமாக வாட்ஸ்அப் சாட்களில் காணப்படும் எமோஜிக்களை போன்றே காட்சியளிக்கிறது. ஸ்டேட்டஸ் அப்டேட் பகுதியில் வழங்கப்பட்டிருப்பதால் இது வழக்கமான சாட்களில் பயன்படுத்த முடியாது என்றே தெரிகிறது.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.110 பதிப்பில் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

புகைப்படம் நன்றி: WABetaInfo

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *