வான்கூவர் தீ விபத்து – மக்களுக்கு எச்சரிக்கை

Please log in or register to like posts.
News

fire-accident15கனடா வான்கூவர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்திருந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத் தலைவர் மரத்தாலான அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை விடுத்துள்ளார்.

மர வீடுகள் ஆபத்தானவை என்று கூறும் Delshad, நீங்கள் எவ்வளவு கவனமாக இருந்தாலும் தப்ப முடியாது, அதற்கு திங்கட்கிழமை நடந்த சம்பவமே சாட்சி என தெரிவித்துள்ளார்.

Lynn Valley என்னுமிடத்தில் அமைந்துள்ள Mountain Village Garden அடுக்கு மாடிக் குடியிருப்பில் திடீரென்று தீப்பற்றியது. இதன் காரணமாக மரத்தாலான அந்த கட்டிடத்திலிருந்து 150 க்கும் மேலானோர் உடனடியாக வெளியேறும் படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இருப்பினும் இதனால் 16 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் இந்த சம்பவத்தின் போது ஒரு வீட்டில் குடும்பத் தலைவரின் மூத்த மகன் ட்ராம்போலினில் குதித்து தப்பி விட மனைவியையும் இளைய 8 வயது மகனும் குதிக்கவில்லை, இதனால் அவர்களை காப்பாற்ற அவர் எடுத்த முயற்சிகள் கைக் கூடாததால், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தின் போது அவருக்கும் படுகாயம் ஏற்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேற்குறிப்பிட்ட செய்தியை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *