விஜய் சங்கர் அபார ஆட்டம்: நியூசிலாந்து ஏ அணியை வீழ்த்தியது இந்தியா ஏ

நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் விஜய் சங்கரின் அபார ஆட்டத்தால் இந்தியா ஏ அணி அசத்தல் வெற்றி பெற்றது. #NZAvINDA

இந்தியா ‘ஏ’ அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்த நிலையில் இன்று மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. ரூதர்போர்டு (70), செய்பெர்ட் (59), நீஷம் (79 அவுட்இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது.

309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி 2-வது பேட்டிங் செய்தது. மயாங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அகர்வால் 24 ரன்களிலும், ஷுப்மான் கில் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 54 பந்தில் 54 ரன்களும், மணிஷ் பாண்டே 36 பந்தில் 42 ரன்களும் சேர்த்தனர். விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 43 பந்தில் 47 ரன்கள் அடிக்க, ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் 80 பந்தில் 87 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா ‘ஏ’ அணி 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது ஒருநாள் போட்டி டிசம்பர் 9-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 11-ந்தேதியும் நடக்கிறது.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *