விடியல் விளையாட்டுக்கழகத்தின்- இறுதிச் சுற்றுப் போட்டி!!

Please log in or register to like posts.
News

அறிவியல் நகர் – விடியல் விளையாட்டுக்கழகத்தினரால் நடாத்தப்பட்ட
துடுப்பாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியும் வெற்றிக்கிண்ணம் வழங்கலும் நிகழ்வு திருமுறுகண்டி, இந்துபுரம் – பீனிக்சு விளையாட்டுக்கழக திடலில் நேற்று இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் இந்துபுரம் – பீனிக்சு விளையாட்டுக்கழகம் எதிர் அறிவியல் நகர் – விடியல் விளையாட்டுக்கழகம் மோதின. இதில் இந்துபுரம் – பீனிக்சு விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

நிகழ்வில் விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா – லோகேசுவரன், இந்துபுரம்
கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் திரு.சிதம்பரம் – தர்மராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டியின் முடிவில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணமும்
பரிசில்களும் வழங்கப்பட்டன. வெற்றிக் கிண்ணத்தினை விருந்தினர்கள் வழங்கி சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *