விநாயகர் சதூர்த்தி முன்னிட்டு புதுச்சேரியில் விநாயகர் சிலையை வாங்கி செல்லும் பக்தர்கள் படங்கள் – அகுரூஸ்தனம்

புதுடெல்லி: இந்தியன் ஆயில் நிறுவனம், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 56 காசு குறைத்துள்ளது.இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து வந்தாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதே நிலையில் நீடிப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டு வரும் நிலையில், பெட்ரோல் விலையை மாநில வரிகளை தவிர்த்து, லிட்டருக்கு 56 காசு குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகைக்கான வரியையும் சேர்த்து மொத்தமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள் குறைந்துள்ளது.