விபத்தில் கணவன் – மனைவி பலி!

குருணாகல் – நீர்கொழும்பு பிரதான வீதியின் புலுபிட்டிய பகுதியில் நேற்று (19) இரவு காரொன்றும் கெப் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் தம்பதியினர் உயிரழந்துள்ளனர்.

விபத்துக்கு உள்ளான காரில் பயணித்த மடவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதான கணவரும், 30 வயதான மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *