விமர்சித்த நபர் கைது – பேரரசியார் வருத்தம்

கோலாலம்பூர், செப். 14 – பேரரசியார் துங்கு அஸிஸா அமீனா மைமுனா இஸ்கண்டார் தமது டுவிட்டர் கணக்கை மீண்டும் முடுக்கி விட்டதோடு தம்மை விமர்சித்த நபரைப் போலீசார் கைது செய்தது சம்பந்தமாக தமது கவலையைத் தெரிவித்துக் கொண்டார்.

சனிக்கிழமை வெளியிடப்பட்ட டுவிட்டர்களில் , தாம் டுவிட்டர் கணக்கை முடக்கியது தம்மைப் பற்றி நிந்தனையாக விமர்சித்ததற்காக இல்லையென்றும் சில சொந்த காரணங்களுக்காகவே அப்படி செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இது சுதந்திரமான நாடு என்றும் தம்மை விமர்சித்த நபரைக் கைது செய்திருக்கத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பேரரசியாரை டுவிட்டரில் விமர்சித்த மலேசிய சோஷலிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் காலிட் இஸ்மத், பேரரசியாரை விமர்சித்தது பற்றித் தாம் மன்னிப்பு கேட்கதாகவும் அதனை அவர் ஏற்றுக் கொள்வார் என நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பேரரசியார் தமது நிலை பற்றி டுவிட்டரில் வெளியிட்ட பின்னர், இஸ்மத் வெள்ளிக்கிழமையன்று கிள்ளானில் கைது செய்யப்பட்டார்.

The post விமர்சித்த நபர் கைது – பேரரசியார் வருத்தம் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *