விமானப் பயணியின் கைப்பை தந்த அதிர்ச்சி!

பெர்லின், செப்.14- ஜெர்மனியிலிருந்து மாஸ்கோவிற்கு பயணம் செய்த ஒரு பயணியின் கைப்பையை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்ட போது அவர்களுக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது கைப்பையில் 20 பாம்புகள் நெளிந்து கொண்டிருந்தன.  பெயர் வெளியிடப்படாத அந்நபர் ஜெர்மனியிலிருந்து புறப்ப்படுவதற்கு முன் பாம்புகளை வாங்தி தனது கைப்பைக்குள் வைத்திருந்ததாக மாஸ்கோ சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

தாம் பாம்புகளை ஜெர்மனியிலுள்ள ஒரு மார்க்கெட்டில் வாங்கியதாக அந்த நபர் ஒப்புக்கொண்டார். என்றாலும் அந்த பாம்புகளை வாங்கியதற்கான முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அவரிடமிருந்து அந்த பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டு மாஸ்கோவில் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஜெர்மன் அதிகாரிகளோ, அப்படி ஒரு சம்பவம் பற்றி தங்களுக்குப் புகார் கிடைக்கவில்லை என்றும் அதனால் ஜெர்மனியில் பாதுகாப்புச் சோதனையின் போது எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பாம்புகளை கைப்பையில் வைத்துக் கொண்டு போவது சட்ட விரோதம் இல்லை என்றாலும் அவற்றை விமானத்தில் கொண்டு செல்வதற்கு முறையான ஆவணங்கள் வைத்திருப்பது அவசியமாகும்.

அதோ போல ரஷ்யாவுக்குள் பாம்புகளுடன் நுழைவதற்கும் விலங்குகள் நல மருத்துவர்கள் அளிக்கும் சான்றிதழ்கள் போன்ற கூடுதல் ஆவணங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

The post விமானப் பயணியின் கைப்பை தந்த அதிர்ச்சி! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *