விலை குறைக்கப்பட்ட மற்றொரு சியோமி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் மற்றொரு ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டது. முன்னதாக சியோமி தனது ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைத்தது. #Xiaomi #RedmiY2

சியோமி நிறுவனம் தனது வை2 ஸ்மார்ட்போனின் விலையை நிரந்தரமாக குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ரெட்மி வை2 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம் மற்றும் 4 ஜி.பி. ரேம் வேரியன்ட்களின் விலை ரூ.1,000 குறைத்திருக்கிறது. புதிய விலை அமேசான், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய விலை குறைப்பின் படி ரெட்மி வை2 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.8,999, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

விலை குறைப்பு மட்டுமின்றி ரெட்மி வை2 ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு எக்சேஞ்ச் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1800 உடனடி கேஷ்பேக் மற்றும் அதிகபட்சம் 240 ஜி.பி. இலவச டேட்டா, ஹங்காமா மியூசிக் சேவைக்கு ஒரு மாதத்திற்கு இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.


சியோமி ரெட்மி வை2 சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்

– அட்ரினோ 506 GPU

– 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம்

– 32 ஜி.பி. / 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9

– டூயல் சிம் ஸ்லாட்

– 12 எம்பி பிரைமரி, 1.25μm பிக்சல், PDAF, f/2.2

– 5 எம்பி பிரைமரி கேமரா

– 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 3080 எம்ஏஹெச் பேட்டரி

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *