விவசாயிகளின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விழால்ஓடை அனைக்கட்டு மற்றும் மூக்கறையன் பாலம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05ம் திகதி இடம்பெறவுள்ளதாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

விவசாயிகளின் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைக்கு தீர்வாக இருந்த விழால்ஓடை அனைக்கட்டு மற்றும் மூக்கறையன் பாலம் ஆகியவற்றுக்கு பாலம் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சரின் இல்லத்தில் நேற்று இடம்பெற்றது.

அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நீர்பாசன மாவட்ட பொறியியளார் எஸ்.அஸ்ஹர், செங்கலடி பொறியியளார் எஸ்.நிரோஷன், தொழில்நுட்ப உதவியாளர் எஸ்.திலிபன், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ரஷீட், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.அமீர், எம்.ஜௌபர், எம்.தையிப், எஸ்.கிருபைராசா, விவசாய இணைப்பாளர் எஸ்.அக்பர், இணைப்பாளர் எம்.எஸ்.றிஸ்மின் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அத்தோடு விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விழால்ஓடை அனைக்கட்டு மற்றும் மூக்கறையன் பாலம் ஆகியவற்றை சென்று பார்வையிட்டார். (கு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *