விஷால் எல்லோரையும் பயன்படுத்தி கழற்றி விட்டுவிடுவார் – ஆர்.கே.சுரேஷ்

விஷால் எல்லோரையும் பயன்படுத்தி கழற்றி விட்டுவிடுவார் என்று கொச்சின் ஷாதி அட் சென்னை 03 படத்தின் விழாவில் ஆர்.கே.சுரேஷ் கூறியிருக்கிறார்.

மஞ்சித் திவாகர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03 ‘என்ற படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நடிகர் சங்க தேர்தல் குறித்து தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது: –

நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி நான்காண்டுகள் தான் ஆகிறது. அதனால் பொறுப்புகளுக்கு போட்டியிட இயலாது.

நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலைத் தவிர்த்து வேறு அனைவருக்கும் என்னுடைய ஆதரவு உண்டு. அதே சமயத்தில் நடிகர் உதயா உள்ளிட்ட பலர் இணைந்து ஒரு அணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அணிக்கு என்னுடைய ஆதரவை தெரிவிப்பேன்.

விஷால் மீது நான் ஊழல் குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் அவர் அப்படிப்பட்ட ஆளில்லை. அவர் தனக்கு யார் தேவையோ அவர்களை பயன்படுத்திக் கொள்வார். அவர் தேர்தலில் போட்டியிட்ட போது அவருடன் ரித்திஷ் இருந்தார். பிறகு அவரைவிட்டு பிரிந்துவிட்டார்.

அவருடன் இணைந்திருந்த உதயா தற்போது இல்லை. அவருடைய மேனேஜர் முருகராஜ் விஷாலுடன் இருந்தார். தற்போது அவரும் இல்லை. அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரிய வில்லை.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயர், தமிழ் நடிகர்கள் சங்கம் என்று விதிப்படி மாற்றி அமைக்க மீண்டும் முயற்சிப்போம். விஷால் நடிக்கட்டும். அவரை நடிக்க அனுமதியுங்கள்.

‘பில்லா பாண்டி’ பட வி‌ஷயத்தில் எனக்கும் விஷாலுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இந்நிலையில் ‘பில்லா பாண்டி’ படத்தின் கதை நன்றாக இல்லை. அதனால் ஓடவில்லை என்று அவர் சொன்னது எனக்கு வருத்தமாக இருந்தது. அப்படி சொல்லி இருக்க தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *