வீடு புகுந்து கொள்ளை: ‘கோஜாக்’ கும்பல் காதல் ஜோடி கைது!

Please log in or register to like posts.
News

தைப்பிங்,டிசம்.07- வீடு புகுந்து திருடும் வேலையில் ஈடுபட்டு வந்த ‘கோஜாக்’ குண்டர் கும்பலைச் சேர்ந்த   காதல் ஜோடி பிடிபட்டது.

கடந்த 7 மாத காலமாக இந்தக் கும்பல் இவ்வட்டாரத்தில் வீடு புகுந்து திருடுவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்தக் கும்பலில் இடம் பெற்றிருந்த இந்தக் காதல் ஜோடியும் மற்றொரு நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் முதல் இங்குள்ள 15 க்கும் மேற்பட்ட வீடுகளில் களவாடியுள்ள  இவர்கள் சுமார் 30 வயதுடையவர்கள் என நம்பப்படுகிறது.

இவர்கள் வீடுகளில் இருந்து களவாடிய பொருள்களை போதைப் பொருள்களுக்காக விற்று வந்து வந்துள்ளனர். கம்போங் சுங்கை ரிலோங் என்ற இடத்திலுள்ள வீடு ஒன்றினுள் அதிரடி வேட்டை நடத்திய பின்னர் இந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள்களையும் இந்தக் கும்பல் திருடி வந்துள்ளது. வீடு மற்றும் கார்களில் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் மீட்கப்பட்டன.

The post வீடு புகுந்து கொள்ளை: ‘கோஜாக்’ கும்பல் காதல் ஜோடி கைது! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *