வீட்டில் வைத்து வணங்க வேண்டி தெய்வங்கள்!!

பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும்.அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். மேலும் வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.குல தெய்வத்தின் படம்அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். மேலும் குலதெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை.விநாயகர் படம்விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழுமுதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம்.சிவபெருமானின் படம்சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம். எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.முருகர் படம்அரச காரியங்களில் வெற்றி பெறவும் அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும் அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை அரசும் இல்லை.அர்த்தநாரீஸ்வரின் படம்அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை அன்பு காதல் பாசம் உண்டாகும்.கிருஷ்ணரின் படம்ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும். தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.குழந்தை கடவுள் படம்குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நல்ல குழந்தைகள் பிறக்கும்.லட்சுமி படம்லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் திருமகளின் அருள் கிட்டும். நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.தட்சணாமூர்த்தியின் படம்ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று. இதனால் அறிவும் ஞாபக சக்தியும் உண்டாகும். கல்வி ஞானம் கிட்டும்.கலைமகள்கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும் எழுத்துத்திறமையும் உண்டாகும்.அன்னபூரணியின் படம்அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் வறுமை அகலும். பசி பட்டினி பஞ்சம் தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *