வீதியைவிட்டு விலகி பஸ் கவிழ்ந்தது!

Please log in or register to like posts.
News

ஹட்டனில் இருந்து ஓல்ட்டன் வழியாக சாமிமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஹட்டன், நோர்வூட் பிரதான வீதியில் விபத்துக்குள்ளானதில் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.படுகாயமடைந்த அனைவரும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹட்டன் நகரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சாமிமலை பகுதிக்கு சென்ற குறித்த பேருந்து நேற்றுமாலை 4 மணியளவில் பாதையை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறின் காரணமாக குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.இந்நிலையில், படுகாயமடைந்த 29 பேரில் 4 பெண்களும், 2 சிறுவர்களும் மற்றும் 23 ஆண்களும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும்,குறித்த விபத்துத் தொடர்பான விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *