வைஃபை மூலம் வெடிகுண்டு தாக்குதல்: கும்பலைத் தகர்த்தது இந்தோ. போலீஸ்!

ஜக்கர்த்தா, மே.19- இந்தோனேசியாவில் பொதுமக்கள் நிறைந்த கூட்டங்களில் நவீன முறையில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகளின் கும்பலை போலீசார் முறியடித்தனர்.

தங்களின் முதுகுப் பைகளில் வெடி குண்டுகளை நிரப்பி வைஃபை மூலமாக அதனை வெடிக்கச் செய்ய ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்த நிலையில், அந்தக் கும்பலை போலீசார் முறியடித்து இருக்கின்றனர். இந்த வெடிகுண்டு கும்பலோடு தொடர்புடைய வெடிகுண்டு தயாரிக்கும் ஆற்றல் பெற்ற தீவிரவாதிகள் பலரை இந்தோனேசிய போலீசார் கைது செய்தனர்.

இந்தோனேசிய பொதுத் தேர்தல் நடந்து முடிந்து அடுத்த வாரத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

வைஃபை மூலமாக தங்களின் முதுகுப் பைகளில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வது தான் இவர்களின் திட்டமாக இருந்தது என்று இந்தோனேசிய போலீசார் தெரிவித்தனர்.

இந்தத் தீவிரவாத கும்பலைச் சேர்ந்த வெடிகுண்டு தயாரிக்கும் ஆற்றல் கொண்ட தீவிரவாதிகளை தாங்கள் கைது செய்து இருப்பதாகவும் பொது இடங்களில் கூடும் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

The post வைஃபை மூலம் வெடிகுண்டு தாக்குதல்: கும்பலைத் தகர்த்தது இந்தோ. போலீஸ்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *