வைஷ்ணவிக்கு திடீர் திருமணம்: ஆச்சர்யத்தில் திரையுலகம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்த வைஷ்ணவி இன்று தனது காதலனை திடீரென திருமணம் செய்துள்ளார்.

பிரபல எழுத்தாளர் சாவித்ரியின் பேத்தியும், வானொலி ஒன்றில் ஆர்.ஜே வாக பணியாற்றிவருமான வைஷ்ணவி, கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன்மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

அடிக்கடி சமூகவலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் பேசியும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான அஞ்சான் என்பவரை திடீரென திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்துள்ளனர்.

வைஷ்ணவி தன்னுடைய திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவை அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *