ஸாக்கிரை திருப்பி அனுப்புவது எப்போது? இந்தியா கேள்வி! மலேசியா பதில்!

கோலாலம்பூர், ஜூலை. 14-  இந்தியாவினால் தேடப்பட்டு வரும் மதபோதகர் ஸாக்கிர் நாயக்கை மீண்டும் இந்தியாவுக்கு நாடு கடத்துவது கடந்த ஆண்டிலிருந்தே பரிசீலனையில் இருந்து வருகிறது என்று மலேசிய வெளியுறவு அமைச்சு அறிக்கை தெரிவித்துள்ளது.

ஸாக்கிர்  நாயக் எப்போது இந்தியாவுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுவார் என்று இந்திய அரசாங்கம் மீண்டும் மலேசிய அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பி இருப்பதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த போதே அமைச்சுமேற்கண்டவாறு தெரிவித்தது.

ஸாக்கிர்  நாயக்கை திருப்பி அனுப்புவது தொடர்பில் கோலாலம்பூரில் உள்ள தனது தூதராக மூலமாகவும் காலகட்டம் குறித்து இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

நாங்கள் இந்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு பதில் அளித்திருக்கும் மலேசியா இன்னமும் அந்தக் கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது என்றும் இந்த நடைமுறை சற்று காலதாமதம் ஆகும் என்றும் அவர் கூறியிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் ரவிஸ் குமார் தெரிவித்தார்

The post ஸாக்கிரை திருப்பி அனுப்புவது எப்போது? இந்தியா கேள்வி! மலேசியா பதில்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *