ஸாக்கிர் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது ஏன் ? பிரதமரிடம் இராமசாமி கேள்வி 

பினாங்கு, ஆகச்ட் 23 – ஸாக்கிர் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது ஏன் என பிரதமர் மகாதீரிடம் பினாங்கு துணை முதல்வர் இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸாக்கிர் மீது எழுந்த கண்டனங்களை அடுத்து, அவரின் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து குறித்து முடிவெடுக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார். ஆனால் நேற்று இப்போதைக்கு ஸாக்கிர் இந்தியாவிற்கு திரும்பி அனுப்பப்பட மாட்டார் என கூறியுள்ளார். இது ஸாக்கிர் மீது முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதானே அர்த்தமாகிறது?

அவர் மலேசியர்கள் அனைவருக்குமான பிரதமர் என்பதை மறக்கக்கூடாது. ஒரு சில தரப்பினரை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக ஒட்டுமொத்த மலேசியர்களை மறக்க கூடாது.

ஸக்கிர் நாய்க் மீதான நடவடிக்கை எடுப்பதற்கு முன் போலீஸ் விசாரணை முடிய வேண்டும் எனும் மகாதீரின் நிலைப்பாட்டை நான் ஏற்கிறேன் ஆனால் அதற்கு எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ஸாக்கிர் மீது தீவிர நடவடிக்கை எடுக்காதது ஏன் ? பிரதமரிடம் இராமசாமி கேள்வி  appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *