ஹங்வெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மற்றுமொரு ஒரு சந்தேக நபர் கைது

ஹங்வெல்ல-எம்புல்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 15 ஆம் திகதி சுரேஷ் குணசிங்க என்ற நபர் சுட்டு கொலை செய்யப்பட்டு, மற்றுமொருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

41 வயதுடைய குறித்த சந்தேகநபர் ஹங்வெல்ல, வனாகொட பிரதேசத்தில் வைத்து மிரிஹான காவல்துறையின் சட்ட அமுலாக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 4 வாள்களும், 4 கைப்பேசிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *