ஹாங்காங்கில் எதிர்ப்பு தீவிரம்: மசோதாவை ஒத்திவைத்தது சீனா! 

ஹாங்காங், ஜூன். 13 -சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் கில் அரசு கொண்டு வந்துள்ள நாடுகடத்தும் மசோதாவை எதிர்த்து பொதுமக்கள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் மசோதா ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. போராட்டம் வலுவடைந்து வருவதால் மசோதாவை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்து விட்டது.

அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் கைதிகளை நாடுகடத்தும் புதிய மசோதாவின்படி குற்றச்சம்பவங்களில் விசாரணைக்காக சீனாவுக்கு கொண்டு செல்லப்படுவர்.

இதற்கு ஹாங்காங்கைச் சேர்ந்த எதிர்க்கட்சியின் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசியல் ரீதியில் பழிவாங்க எங்களை சீனாவுக்கு கடத்துவதற்கு இது வழிவகுத்து விடும் என எதிர்க் கட்சிகள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து நாடு கடத்தும் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் எதிர்ப்பை மீறி இந்த மசோதா நிறைவேற்றப்படும் என ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் உறுதியுடன் கூறியிருந்தார்.

இந்த மசோதா மீது நேற்று விவாதம் நடத்தப்படவிருந்தது.  வரும் 20ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது . கேரி லெம் உட்பட பலர் சீனா ஆதரவாளர்கள் என்பதால் இந்த மசோதா நிறைவேற்றுவதற்கான  வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.

லட்சக்கணக்கானோர் குவிந்ததால் அங்கு பதற்றம் நிலவியது. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக அதற்குள் நுழைவதற்கு போராட்டக்காரர்கள் முயன்றனர். முதலில் தடியடி நடத்தப்பட்டது. ஆனால் நிலைமை கட்டுப்படுத்த முடியாததால் மிளகுத்தூள் தாண்ணீர் பாய்ச்சப்பட்டது. இதைத் தொடர்ந்து கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.

இதற்கிடையே மசோதா விவாதம் ஒத்திவைக்கப்பபடுவதாக  அரசு அறிவித்துள்ளது. ஆனால், மறு தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை இருந்தாலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து சாலையில் குவிந்துள்ளனர்.

The post ஹாங்காங்கில் எதிர்ப்பு தீவிரம்: மசோதாவை ஒத்திவைத்தது சீனா!  appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *