ஹாட்­லிக் கல்­லூ­ரிக்கு எதி­ராக முன்­னிலை பெற்­றது ஸ்கந்தா!!

By அபி பதிவேற்றிய காலம்: Jan 12, 2019இலங்­கைப் பாட­சா­லை­கள் துடுப்­பாட்­டச் சங்­கத்­தால் நடத்­தப்­ப­டும் 13 வய­துப் பிரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஹாட்­லிக்கு எதி­ரான ஆட்­டத்­தில் முதல் இன்­னிங்­ஸில் முன்­னிலை பெற்­றது ஸ்கந்தா.சுன்­னா­கம் ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன் ­தி­னம் இந்த ஆட்­டம் இடம்­பெற்­றது. நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற பருத்­தித்­துறை ஹாட்­லிக் கல்­லூரி அணி களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித் தது. இதன்­படி முத­லில் துடுப்­பெ­ டுத்­தா­டிய சுன்­னா­கம் ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி அணி சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 160 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ட­ச­மாக சீரா­ளன் 59 ஓட்­டங்­க­ளை­யும், கேது­சன் 30 ஓட்­டங்­க­ளை­யும், ஸ்ரெபான் 18 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.பந்­து­வீச்­சில் டிமில்­ரன்;, டினோ­ஜன் இரு­வ­ரும் தலா 3 இலக்­கு­க­ளை­யும், அர்­ஜுன், பிரி­யந்­தன் இரு­வ­ரும் தலா 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய பருத்­தித்­துறை ஹாட்­லிக் கல்­லூரி அணி 34.5 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 99 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அபி­சாந் 30 ஓட்­டங்­க­ளை­யும், தருண் ஆட்­ட­மி­ழக்­காது 16 ஓட்­டங்­க­ளை­யும் ஜெனு­சன் 13 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.பந்து வீச்­சில் சுன்­னா­கம் ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூ­ரி­யின் சார்­பில் டனிலோ 4 இலக்­கு­க­ளை­யும், பிர­ண­வன் 3 இலக்­கு­க­ளை­யும், கேது­சன் 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.இரண்­டா­வது இன்­னிங்­ஸூக்­கா­கத் துடுப்­பெ­டுத்­தா­டிய சுன்­னா­கம் ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி அணி 10 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் ஓர் இலக்கை இழந்து 19 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்­த­போது நாள் முடி­வுக்கு வந்­தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *