12வது மாடியிலிருந்து வீசப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள்

மோஸ்கோ, அக் 9- அடுக்குமாடி குடியிறுப்பின் கீழ் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் 12வது மாடியிலிருந்து வீசப்பட்ட ஒரு பெண்ணின் தலையைக் கண்டு அதிர்ந்துள்ளனர். பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக இதர உடல் பாகங்கள் வீசி எறியப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ரஷியாவில் உள்ள ஷித்தா எனும் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்துள்ளது.

கேளிக்கை விடுதியில் நிர்வான நடனமாடும் தொழில் புரிந்து வரும் 19 வயது எலிசாவேத்தா அப்பெண் முதலில் கொலை செய்யப்பட்டு பின்னர் அவளின் தலை உட்பட இதர உடல் பாகங்கள் தனித்தனியாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். இச்செயலைப் புரிந்தவன அப்பெண்ணின் காதலனான 38 வயது ஆடவன் என நம்பப்படுகிறது.

அந்த ஆடவனும் அப்பெண்ணும் ஒரே வீட்டில் தங்கியிருப்பதாகவும் அவனை போலிசார் தற்போது விசாரித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அப்பெண்ணை அடக்கம் செய்ய பணம் இல்லை என்றும், நன்கொடை செய்ய வேண்டி அப்பெண்ணின் நண்பர் ஒருவர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.

இறந்த அப்பெண் அனாதை என்றும் தெரிவிக்கப்பட்டது.

The post 12வது மாடியிலிருந்து வீசப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *