16 பேரின் மீது பதிவான, குண்டர் சட்டம் ரத்து…!

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் குடியிருந்த 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமியை 17 பேர் பாலியல் வன் கொடுமை புரிந்தனர். அதைக் கேட்டு நாடே கொதித்துப் போனது.

இந்தப் பாதகச் செயலில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது. குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

அந்த 17 பேரில், 16 பேர், தங்கள் மீதான, குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும், என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு செய்திருந்தனர்.

இதனை விசாரித்த நீதி மன்றம், இவர்கள் கைது செய்யப்பட்டு, 30 நாட்களில் குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், கைது செய்து, 45 நாட்கள் கழித்துத் தான், இவர்கள் மீது, குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

எனவே, மனு செய்திருந்த 16 பேர் மீதான, குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப் படுகிறது, என்று நீதி மன்றம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *