2-வது செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார் ரோஜர் பெடரர்

ஜோகோவிச்சிற்கு எதிரான 2-வது செட்டை பெடரர் 6-1 என எளிதில் கைப்பற்றி 1-1 என சமநிலையைப் பெற்றுள்ளார்.

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் – நம்பர் 2 வீரரான பெடரர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.

‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல செட்டை ஜோகோவிச் முதல் செட்டை  7(7)-6(5) என கடும் போராட்டத்திற்குப் பின் கைப்பற்றினார்.

பின்னர் சுதாரித்துக் கொண்ட ரோஜர் பெடரர் 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஜோகோவிச்சின் கேம்-ஐயும் தட்டிப்பறித்தார். ஆகவே 2-வது செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். இதனால் இரண்டு செட்கள் முடிவில் இருவரும் 1-1 என சமநிலையில் உள்ளனர்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *