200 கோடி ரூபாய் சொத்து… அனாதையாக இறந்த கோடீஸ்வரர்!

இந்தியாவில் 200 கோடிக்கு சொத்து இருந்தும், கோடீஸ்வரர் கடைசி காலத்தில் அனாதையாக உயிரிழந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நிகில் ஜவேரி. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இரண்டவாது மனைவிக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்த இவர், கடந்த 2009-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதனால் மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு நரம்பியல் தொடர்பான பிரச்னைகள் இருப்பதாகக் கூறினர்.

இதனால் அவர் தன் சகோதரி வீட்டில் வசித்து தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். அதன் பின் திடீரென்று கடந்த 2013-ஆம் ஆண்டு மாயமானார்.

உறவினர்கள் மற்றும் மனைவிகள் எங்கு தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அப்போது தான் அவருடைய இரண்டு மனைவிகளுக்கும் ஜவேரிக்குச் சொந்தமான நிலத்தின் மதிப்பு தற்போது 200 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது,

இதனால் இரண்டு மனைவிகளும் அந்த 200 கோடி ரூபாய் சொத்துக்காக உரிமை கொண்டாட, கடந்த 2014-ஆம் ஆண்டு ஜவேரி பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.

அப்போது அவரும் மனநலம் தொடர்பான பிரச்சனைகள் இருந்ததால், அவரை யாரும் பார்த்து கொள்ள விரும்பவில்லை. இதையடுத்து அவர் ஆதரவற்றோர் விடுதியில் கவனிக்கப்பட்டு வந்தார்.

தொடர்ந்து மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 2017-ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை அளித்து வந்த போது, கடந்த சில தினங்களுக்கு முன் அவர் உயிரிழந்தார். உயிரிழந்த அவரின் உடலை வாங்க யாரும் வராத்தால் உடற்கூறு ஆய்வு தாமதமானது, அதன் பின் அமெரிக்காவில் இருக்கும் அவருடைய மகனுக்கு இது குறித்து கூறியதால், அவரை உடலை வாங்க சம்மதித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் இருந்து வந்த அவர் அப்பாவின் உடலை பெற்றார். 2015-ஆம் ஆண்டு நிகில் ஜவேரிக்கு சொத்துக்கு உரிமைக்கோரி அவரின் முதல் மனைவி தீப்தி பஞ்சால் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார்.

இதை எதிர்த்து இந்த ஆண்டு மார்ச் மாதம் ரயான், தீப்தி மற்றும் அவரின் அத்தையின் கணவர்கள் மூன்று பேர் மீது காவல்நிலையத்தில் மோசடி வழக்கு தொடுத்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *