25ஆவது “இசைக்கு ஏது எல்லை” – கலாபூஷணம் எஸ்.பத்மலிங்கம் பாடுகினார்

இசையரங்கத்தின் 25ஆவது “இசைக்கு ஏது எல்லை” மேடையில் ஈழத்தின் மூத்த மெல்லிசைப் பாடகர், இசைமேதை கலாபூஷணம் எஸ்.பத்மலிங்கம் பாடுகினார்.

இலங்கை புத்தூரில் இசைக்குடும்பத்தில் பிறந்து பேரனிடமும் தந்தையிடமும் இசைபயிற்சியை ஆரம்பித்தவர் எஸ். பத்மலிங்கம். பின்னர் வீரமணி ஐயரின் சீடனாக சேர்ந்தார். அவரின் தூண்டுதலினால் 1966ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைகழகத்தில் இணைந்து 1970 வரை பயின்று இசை பட்டதாரியாக நாடு திரும்பினார். 1970இலிருந்து 1979வரை இசை ஆசிரியராக பணிபுரிந்த வேளை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பாடகராகி சுப்பர் கிரேட் வரை கர்னாடக இசையிலும் மெல்லிசையிலும் உயர்ந்தார்.

பின்னர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலேயே இசைத் தயாரிப்பாளராக கடமையாற்றியவர். 1983 கலவரத்தோடு மீண்டும் புத்தூர் சென்றடைந்தவர் மீண்டும் கொழும்பு செல்லவேயில்லை. 1983 இலிருந்து 2000 வரை யாழ் பல்கலைக் கழகத்தில் இசை விரிவுரையாளராகவும் 2000-2003 வரை கிழக்கு பல்கலைகழகத்தில் இசை விரிவுரையாளராகவும் சேவையாற்றி இலங்யை அரசின் உயர் கலைவிருதான கலாபூசணம் விருதையும் பெற்றவர். 2003-2013 சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்திலும் விரிவுரையாளவாக கடமையாற்றிவிட்டு ஓய்வு பெற்றாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று இசை வகுப்புக்களையும் பரீட்சைகளையும் நடத்துவதற்கு உதவி புரிந்து வருபவர். அவர் 25ஆவது இசைக்கு ஏது எல்லையில் பாடுவது
இசையரங்கத்திற்கு பெருமை.

June மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30க்கு. சென்ரானியல் கல்லூரி Ashtonbee வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது

அணிசேர் கலைஞர்கள்

கீபோட் – பயாஸ் ஜவாகீர்
வயலின் – ஜெயதேவன் நாயர்
சித்தார் – ராஜூ ராகவன்
மிருதங்கம் – கஜஜெயன் பரராஜசேகரம்
தபேலா – ஜாதவன் ரவிச்சந்திரன்
ஒக்ரோ பாட்- பாபுதாயகத்தின் புகழ்

பூத்த கலைஞரை கெளரவிக்கத் தவறாதீர்கள். இந்த நிகழ்வை உங்கள் நண்பர்கள் மற்றும் கலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உங்கள் வரவை நாடும்
இசையரங்கம்

Attachments area
isakku-ethu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *